கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஒரு ஆயுள் தண்டனையும் 30 வருட சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்டம் கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட களிமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் முத்துராஜ் இதே பகுதியில் பொன்னுச்சாமி என்பவரும் வசித்து வருகின்றனர்.
பொன்னுச்சாமி மனைவி ஆதி லட்சுமி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது இதில் முத்துராஜன் தலையிட்டு பேசி உள்ளார் இதனால் ஆதி லட்சுமிக்கும் முத்துராஜனுக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக கருதிய கணவர் பொன்னுச்சாமி முத்துராஜை கொலை செய்ய திட்டம் திட்டியுள்ளார்.
கடந்த ஜூலை 2014 ஆம் ஆண்டு முத்துராஜ் அவருடைய தனது வீட்டில் மனைவி பாண்டியம்மாள் மற்றும் இவர்களுடைய மகன் சிவக்குமார் ஆகியவுடன் வீட்டில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீடு புகுந்த பொன்னுச்சாமி கணவன் மனைவி மற்றும் மகன் என மூன்று பேரையும் சரமாரியாக அருவாளால் வெட்இதில் பலத்த காயம் அடைந்த முத்துராஜன் சம்பவ இடத்தில் இறந்து விட்டார் மனைவி மற்றும் மகன் சிவகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மதுரை கருப்பாயூரணி போலீசார் பொன்னுச்சாமியை கைது செய்தனர் பின்னர் இந்த வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு நீதிபதி கிரி விசாரணை செய்தார். அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆஜராகி இந்த வழக்கில் 29 ஆவணங்களை தாக்கல் செய்தார் மேலும் அரசு தரப்பில் 15 சாட்சியங்களையும் விசாரணை செய்து பொன்னுசாமி தான் கொலைகாரன் என்று வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிரி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் பொன்னுசாமிக்கு ஒரு ஆயுள் தண்டனையும், 3 10 வருடங்கள் வீதம் 30 ஆண்டுகளும் தண்டனை விதித்து வருட சிறை தண்டனையும் 16 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார் மேலும் தண்டனை அனைத்தும் ஏக காலத்தில் அனுபவித்துக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பு வழங்கி உள்ளார்.