பழைய நூலக கட்டத்தை இடித்து தள்ள உத்தரவு; அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில்  சேதமடைந்து உள்ள நிலையில் இருக்கும் கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கடந்த 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீட்டின்படி அந்தப் பகுதி மாணவர்கள் பொதுமக்கள் பயன்படும் வகையில் நூலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது இந்த நூலகம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு பழுதடைந்தது இதனால் அந்தக் நூலகம் மாற்றப்பட்டு அந்தப் பகுதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் செயல்பாட்டில் இல்லாத நூலக கட்டிடத்தை சிலர் ஆக்கிரப்பு செய்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவே இந்த கட்டிடத்தை இடித்து மீண்டும் புதிய கட்டிடம் கட்டி நூலகம் திறக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் விஷ்ணுகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. சேதமடைந்த நிலையில் உள்ள நூலக கட்டிடத்தை இடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள் தமிழகத்தில் இதுபோல் எத்தனை நூலக கட்டிடங்கள் சேதம் அடைந்த நிலையில் உள்ளது என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும் இதுபோன்ற கட்டிடங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அரசு  உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என எச்சரிக்கை செய்த நீதிபதிகள். புதிய நூலகம் அமைப்பது குறித்து அரசு சார்பில் விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜனவரிக்கு 25 தேதி ஒத்திவைக்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.