#Breaking ஆவின் ஊழியர்கள் பணி நீக்கத்திற்கு தடை – ஐகோர்ட் அதிரடி உத்தரவு! 

ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யபட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை  விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2020-2021 அ.தி.மு.க ஆட்சியில் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமையகங்களில் பல்வேறு பணிகளுக்கு முறைகேடாக நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை ஓராண்டு உள் விசாரணைக்குப் பிறகு ஆவின் நிர்வாகம் கடந்த வாரம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.  மேலும் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் 26 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.

அதிமுக ஆட்சியில் லஞ்சம் பெற்றுக்கொண்டு தகுதியற்றவர்களுக்கு பணி வழங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் பணி நீக்கம் செய்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து கே.பவ்னீத் சூர்யா, எம்.ராஜசேகர், டி.ஏழுமலை உள்ளிட்ட 25 பேர் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அனைத்து தேர்வு நடைமுறைகளும் முடிந்து, நியமிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக பணியில் நீடிக்கும் நிலையில், எந்த நோட்டீசும் அளிக்காமல் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில், ஒன்றியத்தின் பொது மேலாளர் மூலம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் நடைபெற்ற நிலையில்,  ஆவின் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 17 தள்ளிவைத்தார். அதேசமயம் ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யபட்ட உத்தரவுக்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.