ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு; தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் கண்ணன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதோடு,பணபட்டுவாடா, பரிசு பொருள் வினியோகம் தொடர்பாக சுயேட்சை வேட்பாளர் அளித்த புகார் மனு மீது முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தலுக்கு கூடுதல் படைகள் பணியமர்த்த கோரியும், கண்காணிப்பு கேமரா, வெப் காஸ்டிங் செய்ய கோரியும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.

அதிமுக தொடர்ந்த வழக்கில் விரிவான உத்தரவுகளை பிறப்பித்துள்ள உயர்நீதிமன்றம், நாம் தமிழர் கட்சி புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈரோடு தொகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட கொட்டகைகளுக்கு சீல் வைக்கப்பட்டு விட்டதாகவும் 107 கொட்டகைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 42 கொட்டகைகளை சம்பந்தப்பட்ட கட்சிகளே அகற்றி விட்டதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்து தீர்ப்பளித்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.