கரையை கடக்க தொடங்கியது தாழ்வு மண்டலம்; மழை படிப்படியாக குறைய வாய்ப்பு! மக்கள் மகிழ்ச்சி;

ஊடகங்களில் எங்கு பார்த்தாலும் கனமழை என்ற பேச்சுவார்த்தையே தற்போது தமிழகமெங்கும் நிலவி வருகிறது.  எதிர்பாராத விதமாக இந்த ஆண்டு பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிகுந்த பாதிப்படைந்துள்ளன.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் அனைத்தும் நீருக்குள் தத்தளிக்கும் நிலையில் காணப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் வங்ககடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருந்தது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை கடற்கரையை மெல்லமெல்ல கடக்க தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வானிலை மையம்

சென்னை அருகே வந்தவுடன் நான்கு கிலோமீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து வருகிறது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழப்பதால் தமிழ்நாட்டில் படிப்படியாக மழை குறையும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் படிப்படியாக மழை வாய்ப்பு என்று கூறியது பெரும் சந்தோஷத்தை உருவாக்கியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment