குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பே இல்லை! நாளை வலுவிழந்துவிடும்!!

குறைந்த காற்றழுத்த தாழ்வு

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்த வடகிழக்கு பருவமழை தொடங்கியதுடன் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடங்கியது.மழை

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளைய தினம் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்கக்கடல், அதையொட்டிய இலங்கை கடலோரத்தில் நிலவும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை தினத்தோடு வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகவே நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இதனால் தமிழ்நாட்டில் மழை படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக மாறும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இதனால் தமிழகம் மக்கள் மத்தியில் ஓரளவு சந்தோசம் உருவாகியுள்ளது.ஏனென்றால் தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print