எதிர்பார்த்து காத்திருந்த 5ஜி வரப்போகிறது; முதற்கட்டமாக 13 நகரங்களில் அமைக்க திட்டம்!

இந்தியாவில் 5ஜி

இந்தியாவில் எப்போது வரும் எப்போது வரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது 5ஜி ஆகும். ஆனால் முன்னணி மொபைல் போன் நிறுவனங்கள் 5ஜி அமைப்போடு மொபைல் போன்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி 2022ஆம் ஆண்டு இந்தியாவில் 13 நகரங்களில் 5ஜி இன்டர்நெட் சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தொலைத் தொடர்புத்துறை 5ஜி  சேவைகள் உண்மையில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்தி நகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ மும்பை மற்றும் புனே ஆகிய 13 பெருநகரங்களில் தொடங்கப்பட உள்ளன.

இருப்பினும் எந்த தொலைத்தொடர்பு ஆபரேட்டர் வணிகரீதியாக முதலில் செயல்படுவார் என்பதை அரசாங்கம் உறுதி படுத்தவில்லை. இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வி (வோடபோன் ஐடியா) போன்ற மூன்று முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதற்காக DoT எட்டு உள்நாட்டு 5ஜி சோதனை படுக்கை திட்டத்திற்காக ஏஜென்சிகள் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதற்கான முடிவு இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

அந்த வரிசையில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் பம்பாய் (ஐஐடி) பம்பாய், ஐஐடி டெல்லி, ஐஐடி ஹைதராபாத், ஐஐடி மெட்ராஸ், ஐஐடி கான்பூர், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் பெங்களூரு, சொசைட்டி பார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அண்ட் ரிசர்ச், சென்டர் ஆஃப் எக்சல்லேன்ஸ் இன் வயர்லெஸ் டெக்னாலஜி ஆகும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment