நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நம் தமிழ்நாட்டில் இந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. அதிலும் சில சுயேச்சை வேட்பாளர்கள் மக்களை கவரும் வகையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இதனால் உள்ளாட்சித் தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் பிப்ரவரி 4 ஆம் தேதியான நாளை தினத்தோடு நிறைவடைகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ளனர். இம்முறை 8 முனை போட்டி நிலவுவதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 27 மாநகராட்சிகளில் சென்னை, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி தாழ்த்தப்பட்ட இன மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட ஒன்பது மாநகராட்சி மேயர் பதவிகள் அனைத்தும் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.