நேற்று சாப்பிட்ட சாப்பாட்டு பார்சலில் பல்லி! இன்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு!!

உணவு உணவகங்களில் தற்போது கலப்படங்கள் அதிகம் காணப்படுகிறது. பல உணவகங்களில் கெட்டுப்போன உணவுகளை கூட பதப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பல குழந்தைகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பாதிப்படைகின்றனர்.

பார்சலில் பல்லி

நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உணவகத்தில் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் மயக்கம் அடைந்தனர்.அதன்படி நேற்றைய தினம் தாயார் ஒருவர் தனது 2 மகன்கள் ஒரு உணவகம் ஒன்றில் உணவு அருந்தி தன் வீட்டுக்கு பார்சல் வாங்கி சென்றார்.

உணவகத்தில் சாப்பிட்ட அந்த இரண்டு குழந்தைகள் திடீரென்று மயக்கம் அடைந்தால்  அவர்களை தாயார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அனுமதித்தார். அதோடு மட்டுமில்லாமல் அந்த உணவகத்தில் வாங்கிய பார்சலில் பல்லி ஒன்று இருந்தது தாயாரை மிக அதிர்ச்சி அடைய வைத்தது.

இதனால் தற்போது சங்கராபுரம் உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள உணவகத்தில் பல்லி விழுந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.

நேற்று உணவகத்தில் வாங்கிய பார்சல் உணவை சாப்பிட்ட குழந்தைகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்றைய தினம் ஆய்வு செய்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment