Connect with us

துருக்கி: தன்னை கடித்த பாம்பை கடித்து கொன்ற சிறுமி!!

selva 5 16607325273x2 1

செய்திகள்

துருக்கி: தன்னை கடித்த பாம்பை கடித்து கொன்ற சிறுமி!!

பொதுமக்கள் மத்தியில் பாம்பு என்றால் படையும் நடுங்கும் எனக்கூறும் வழக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் தன்னை கடித்த பாம்பை பதிலுக்கு கடித்துக் கொன்றுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி நாட்டில் உள்ள கந்தார் என்ற கிராமத்தில் மெஹ்மத் எர்கான் என்பவருக்கு 2 வயதில் குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் வீட்டின் பின்புறம் இருக்கும் தோட்டத்தில் குழந்தை விளையாடி கொண்டிருக்கும் போது அலறல் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பயந்துபோன அவர் அங்கு சென்று பார்த்தப்போது, அதிர்ச்சியில் உறைந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அக்குழந்தை வாயில் ஒரு பாம்பைக் கடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த அவர்கள் உடனடியாக வாயிலிருந்து பிடுங்கிப் கீழே போட்டுள்ளனர்.

பின்னர் பாம்பானது உயிரிழந்து இருப்பதாக தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது மெஹ்மத் எர்கான் என்ற அக்குழந்தை நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், அத்தகைய பாம்பானது விஷமற்றதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். தன்னை கடித்த பாம்பை பதிலுக்கு கடித்துக் கொன்றுள்ளது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top