அதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா மாஸ் ஹீரோக்களின் பட்டியல்..!!

தற்போது நாம் தமிழ்சினிமாவின் காஸ்ட்லி ஹீரோக்கள் பற்றி பார்க்க போகிறோம். இது அவர்களின் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள பட்டியலாகும். அதில் முதலிடத்தில் காணப்படுகிறார் தளபதி விஜய். நடிப்பில் அண்மையில் Beast திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட வசூலில் சாதனை புரிந்து கொண்டுதான் வருகிறது. அதுவும் குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்திற்குப் பின்பு விஜய் கேட்கும் சம்பளங்களை தயாரிப்பு நிறுவனங்கள் அது கொடுத்துக் கொண்டு வருவதாக தெரிகிறது.

2014ம் ஆண்டுக்கு முன்பு விஜய்யின் சம்பளம் 20 கோடி தான் இருந்தது. ஆனால் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் விஜய் கேட்கும் சம்பளத்தை கொடுக்க ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமும் முன்வந்து கொண்டு வருகிறது.

இதற்கு அடுத்தபடி இரண்டாவது இடத்தில் இருப்பது தல அஜித் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவன தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு 105 கோடி ரூபாய் சம்பளம் என்பது தற்போதைய தகவல்.

மேலே குறிப்பிட்ட இரண்டு மாஸ் ஹீரோக்களுக்கு முன்பாக நூறு கோடி ரூபாய் கலெக்ஷன்களில் உள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படத்திற்கு ரூபாய் 105 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாக இந்த ஒரு சாதனை புரிய வில்லை. எனவே அந்த இழப்பை ஈடு செய்வதற்கு அடுத்த படத்திற்கும் அண்ணாத்த  பட தயாரிப்பு நிறுவனத்திடம் கால்ஷீட் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர்கள் வரிசையில் 4வது இடத்தில் உள்ளவர் நடிகர் கமலஹாசன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் தான் தமிழில் எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டு வருகிறது. என்னதான் இவர் உலக நாயகன் என்று அழைக்கப்பட்டாலும் இவரின் சம்பளம் 35 கோடி ரூபாய்க்கு உள்ளே உள்ளது என்பதும் சினிமா வட்டாரங்களில் தகவலாக காணப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக 5-ஆவது இடத்தில் காணப்படுகிறார் நடிகர் சூர்யா. சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான சூரரைப்போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படம் இவருக்கு பெரிய வரவேற்பு கொடுத்தது. இதனால் இவரது சம்பளத்தில் சற்று மாற்றியுள்ளதாக காணப்படுகிறது. இந்த திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்பு சூர்யாவின் சம்பளம் 25 கோடி ரூபாயாக மாறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்தபடியாக நடிகர் சிவகார்த்திகேயன் காணப்படுகிறார். சின்னத்திரையில் இருந்து இன்று  மிகப் பெரிய நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு 25 கோடி ரூபாய் வரை சம்பளம் கிடைத்துள்ளதாக காணப்படுகிறது.

அடுத்தபடியாக நடிகர் தனுஷ் காணப்படுகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் வளர்க்கும் படங்களில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் அண்மையில் வெளியான கர்ணன் திரைப்படம் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. நடிப்பின் உச்சம் அடைந்து கொண்டுள்ள தனுஷுக்கு சம்பளம் 20 கோடி ரூபாய் வழங்க பட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

மேலும் உங்களுக்காக...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment