Connect with us

காத்திருக்கும் தொண்டர்களுக்கு ஜோரான செய்தி! இன்று மாலை வேட்பாளர்பட்டியல் வெளியாகலாம்?

திமுக

தமிழகம்

காத்திருக்கும் தொண்டர்களுக்கு ஜோரான செய்தி! இன்று மாலை வேட்பாளர்பட்டியல் வெளியாகலாம்?

காத்திருக்கும் தொண்டர்களுக்கு ஜோரான செய்தி! இன்று மாலை வேட்பாளர்பட்டியல் வெளியாகலாம்?

அந்த நேரத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளோடு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் ஒரு சில கட்சிகள் தங்களுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர்.

அந்தப்படி தற்போது பாட்டாளி மக்கள் கட்சியினர் தங்களது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே வேளையில் மக்கள் நீதி மயம் தங்களது ஆறாம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுக கட்சி கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கும் நிலையில் எதிர்பாராத விதமாக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்படி வரிசையாக அனைத்து கட்சிகளும் தங்களது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில் திமுக தரப்பில் இருந்து இன்று வரையும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக வில்லை.

இதனால் திமுக தொண்டர்கள் பலரும் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் கழகத்தின் சார்பில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி இன்று மாலை திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பட்டியல் ஆகலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது குறித்து திமுக நிர்வாகிகளுடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த தீவிர ஆலோசனைக்கு பிறகு இன்று மாலை முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகளான இடப்பங்கீடு உறுதியான நிலையில் வேட்பாளர் பட்டியல் இன்று மாலை அறிவிக்கப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top