இன்று கூடுகிறது சட்டப் பேரவை : எந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டிற்கான 2022-23 பட்ஜெட் கடந்த மாதம் 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் சட்டப் பேரவையில் இன்று வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் நூல் விலையேற்றம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதால் இதுதொடர்பாக அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து பயிர்க்கடன், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு, பால் கொள்முதல் விலையை உயர்த்துதல் போன்றவைகள் குறித்து கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது.
மேலும், வேளாண்மை, மீன்வளம், பால்வளம் மானிய கோரிக்கை மீதான விவாதங்களை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், நாசர் ஆகியோர் சட்டச்சபையில் பதிலுரை அளிப்பதாக தெரிகிறது.
