பிரபல தொழிலதிபரான சரவணா ஸ்டோர் உரிமையாளர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ‘தி லெஜெண்ட்’ படத்தில் அறிமுகமாகயுள்ளார். சுமார் 100 கோடி மதிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் மறைந்த காமெடி நடிகர் விவேக், ரோபோ ஷங்கர், பிரபு, விஜய் குமார், நாசர், மையில் சாமி மற்றும் கோவை சரளா, யாஷிகா ஆனந்த் என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தில் வாடிவாசல் பாடல் , மொசலோ மொசலு பாடல் , விஞ்ஞானி, ஜிம் மேனி பாடலும் சமீபத்தில் வெளியாகியுள்ளது.3 பாடலும் மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூ டியூபில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் – இந்தியா திரைப்படமாக இந்த படம் வெளியாக உள்ள நிலையில் தற்போழுது இந்த படம் ஜூலை 28-ஆம் தேதி வெளியாக உள்ளது.
மதுரை ஜி.என்.அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் மூலம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய திரையரங்குகளில் படம் வெளியாகஉள்ளது சர்வதேச சந்தைகளில் திரைப்படங்களை விநியோகிப்பதில் நிபுணத்துவம் பெற்ற திரைப்பட விநியோக நிறுவனமான AP இன்டர்நேஷனல் இந்த படத்தை வாங்கியுள்ளது.
‘கேஜிஎஃப்’ தயாரிப்பாளர்களுடன் கைகோர்க்க தயாராகும் சிம்பு? இயக்குனர் யாரு தெரியுமா?
லெஜெண்ட் படத்தில் சைன்டிஸ்ட் கேரக்டரில் சரவணன் நடித்திருக்கிறார். அதிரடி சண்டைக் காட்சிகள், காதல், சென்டிமென்ட் உள்ளிட்டவை அடங்கிய கமர்ஷியல் படமாக தி லெஜெண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
தி லெஜெண்ட் திரைப்படம் உலகம் முழுவதும் 2500 க்கும் அதிகமான திரையரங்குகளில் 5 மொழிகளில் இம்மாதம் 28-ம்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.