
பொழுதுபோக்கு
தி லெஜெண்ட் சரவணன் படத்தின் மற்றோரு வீடியோ பாடல் வெளியீடு!
பிரபல தொழிலதிபரான சரவணா ஸ்டோர் உரிமையாளர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ‘தி லெஜெண்ட்’ படத்தில் அறிமுகமாகயுள்ளார். சுமார் 100 கோடி மதிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் மறைந்த காமெடி நடிகர் விவேக், ரோபோ ஷங்கர், பிரபு, விஜய் குமார், நாசர், மையில் சாமி மற்றும் கோவை சரளா, யாஷிகா ஆனந்த் என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தில் முன்னதாக வாடிவாசல் பாடல் , மொசலோ மொசலு பாடல் வெளியாகியுள்ளது. இதில் வாடிவாசல் பாடல் வெளியான நான்கு நாள்களில் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை புரிந்துள்ளது.‘மொசலோ மொசலு’ 12 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூ டியூபில் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் – இந்தியா திரைப்படமாக இந்த படம் வெளியாக உள்ள நிலையில் தற்போழுது இந்த படம் ஜூலை 28-ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.அந்தப் படத்தை தமிழகத்தில் மதுரை அன்புச் செழியன் வெளியிடுகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் மற்றோரு பாடல் வெளியாகியுள்ளது . இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள ரொமாண்டிக் பாடலான போ போ போ வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இன்னாத பாடலில் மதன் கார்க்கி லெஜெண்ட் அவர்களை விஞ்ஞானி, ஜிம் மேனி என புகழ்ந்து எழுதியுள்ளார்.
விருது நிகழ்ச்சிக்கு மாடல் ட்ரெஸ்ஸில் வந்த ராஷ்மிகா! மிரளவைக்கும் அழகான வீடியோ!
