Connect with us

நாளை வெளியாகும் தி லெஜண்ட் படத்திற்கு இப்படியொரு அதிஷ்டமா? முதல் காட்சி எப்போ தெரியுமா?

Arul Saravanans The Legend movie gets release date

பொழுதுபோக்கு

நாளை வெளியாகும் தி லெஜண்ட் படத்திற்கு இப்படியொரு அதிஷ்டமா? முதல் காட்சி எப்போ தெரியுமா?

பிரபல தொழிலதிபரான சரவணா ஸ்டோர் உரிமையாளர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ‘தி லெஜெண்ட்’ படத்தில் அறிமுகமாகியுள்ளார். சுமார் 100 கோடி மதிப்பீட்டில் உருவான இந்த திரைப்படத்தை‌ பிரபல இயக்குனர்‌ ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் தி லெஜெண்ட் சரவணன் உடன் இணைந்து மறைந்த காமெடி நடிகர் விவேக், ரோபோ ஷங்கர், பிரபு, விஜய் குமார், நாசர், மையில் சாமி ,தம்பி ராமையா மற்றும் கோவை சரளா, யாஷிகா ஆனந்த் என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

FYeZuMvaUAAlsBR

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் – இந்தியா திரைப்படமாக இந்த படம் நாளை வெளியாக உள்ளது . இந்த படம் வெளியாகும் நாளை சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளதால் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்துப்பாடல்களும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்துள்ளது.யாஷிகா ஆனந்த் மற்றும் ராய் லட்சுமி ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி உள்ளனர்.

FYfKARSUsAIsJic

இந்த படத்தை பிரபல சினிமா விநியோகஸ்தர் மதுரை அன்புச்செழியன் வாங்கியுள்ள நிலையில் இந்த படம் தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 2500க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாக உள்ளது.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித்! வைரல் வீடியோ !

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top