ஓடிடி-க்கு ரெடியான ‘தி லெஜண்ட்’!! எத்தனை கோடிக்கு தெரியுமா?

பிரபல இயக்குனர்‌ ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து கூட்டணியில் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் முதல் முறையாக கதாநாயகனாக என்ட்ரி கொடுத்த படம் தி லெஜெண்ட்.

இந்த படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி, டிகர் விவேக், ரோபோ ஷங்கர், பிரபு, விஜய் குமார், நாசர், மையில் சாமி மற்றும் கோவை சரளா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

பான் இந்தியா படமான இப்படம் தமிழ், தெலுங்கி, இந்தி போன்ற 5 மொழிகளில் ஜூலை 28-ம் தேதி உலகமெங்கும் வெளியாகி சுமார் 5 வாரங்களை கடந்துள்ளது. அதோடு உலகெங்கும் சுமார் 45 கோடி ரூபாய் வசூலித்தாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் படத்தின் சேட்டிலைட் உரிமை மற்றும் ஒடிடி உரிமைக்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது. அதன் படி, சேட்டிலைட் உரிமை 20 கோடி ரூபாய்க்கும், ஒடிடி உரிமை 25 கோடி ரூபாய்க்கும் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.