
பொழுதுபோக்கு
தி லெஜண்ட் ஹீரோயினா இது? இவ்ளோ மாடலா இருக்காங்க! வைரல் புகைப்படம்!
பிரபல விளம்பரத் திரைப்பட தயாரிப்பாளர்களான ஜோசப் டி. சாமி மற்றும் ஜெரால்ட் ஆரோக்கியம் ஆகியோரால் எழுதப்பட்டு இயக்கப்படம் திரைப்படம் தி லெஜண்ட் . இத்திரைப்படத்தில் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி , ஊர்வசி ரவுத்தேலா (அவரது தமிழ் அறிமுகம்), விவேக், விஜயகுமார், யோகி பாபு, ரோபோ சங்கர், சுமன் மற்றும் நாசர் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
The Legend இன் சர்வதேச வெளியீடு வரிசைப்படுத்தப்பட்ட நிலையில், மதுரை ஜி.என்.அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் மூலம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய திரையரங்குகளில் படம் வெளியாகும்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் வகையில் தி லெஜண்ட் திரைப்படம் பான்-இந்தியன் திரைப்படமாக 28 ஜூலை 2022 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் இருந்து வெளியான 3 பாடல்கள் யூடியூபில் மில்லியன் கணக்கில் சாதனை படைத்துள்ளது. இவ்வளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு நிலையில் , தற்போழுது இந்த படத்தின் விளபரத்திற்காக புரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா தற்போது உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ‘தி லெஜண்ட்’ படத்தின் புரமோஷனில் கலந்து வருகிறார்.
ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து ஆகிய இடங்களில் புரமோஷன் செய்து வரும் ஊர்வசி புரமோஷனுக்காக விமானத்தில் பயணம் செய்யும் புகைப்படங்கள் தஎப்பொழுது வெளியாகியுள்ளது.
ரஜினியின் ஜெயிலர் படத்தின் தொடக்க பூஜை எப்போது தெரியுமா?
