தமிழகத்தில் இனி ஆன்லைன் எக்ஸாமே கிடையாது! சட்டக் கல்லூரியிலும் நேரடி எழுத்துத்தேர்வு தான்!!

கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக எக்ஸாம் நடைபெற்று வருகிறது. இது பல மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக காணப்படுகிறது. ஆனால் கடந்த திங்கள்கிழமை அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு சில அதிர்ச்சியான தகவலை அறிவித்திருந்தது.

அண்ணா பல்கலைக்கழகம்

அதன்படி நடப்பாண்டு செமஸ்டர் தேர்வு எழுத்துத்தேர்வு கல்லூரியில் வைத்து நடைபெறும் என்று கூறியது. இவை நடப்பாண்டு மட்டுமின்றி 20 ஆண்டுகளாக அரியர் வைத்த மாணவர்களுக்கும் நேரடி எழுத்துத்தேர்வு தான் என்றும் கூறியிருந்தது.

அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் அனைத்து கல்லூரிகளிலும் இனி ஆன்லைன் எக்ஸாம் கிடையாது என்றும், அனைத்து தேர்வுகளும் கல்லூரியில் வைத்து நேரடியாக நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

எக்ஸாம்

இந்த நிலையில் தற்போது சட்டக்கல்லூரிகளும் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளதாக அறியப்படுகிறது. அதன்படி சட்டப் பல்கலைக்கழக தேர்வு இனி நேரடி முறையில் நடக்க உள்ளது.

சட்ட பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் நேரடி முறையில் மட்டுமே நடைபெறும் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலை பதிவாளர் அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இனி ஆன்லைன் எக்ஸாம் கிடையாது என்பது தெள்ளத்தெளிவாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment