த்ருவ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ… செம வைரலான நியூஸ்…

e0151ee02f06047e4e42d6873b74fb0d

த்ருவ் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ஆதித்ய வர்மா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் த்ருவ் விக்ரம். இவர் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் இவரது தந்தையான விக்ரமும் இணைந்து நடிக்கிறார். 

இதனிடையே இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் த்ருவ் நடிப்பதாக கூறப்பட்டது. அண்மையில் இவர் மாரி செல்வராஜை சந்தித்து வெளியிட்ட புகைப்படமும் வைரல் அடித்தது. 

இந்நிலையில் தற்போது இத்திரைப்படம் குறித்து உறுதியான தகவலை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான பா.இரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் த்ருவ் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். 

தற்போது தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து, இத்திரைப்படத்தின் நடிகர்கள் தேர்வு மற்றும் பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.