மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து காலமான தமிழ் நடிகர்

a18bf0a5b0d57c7ba2436dafd222020e-1

ஹலிதா ஷமீம் என்ற பெண் இயக்குனர் இயக்கிய ஆந்தாலஜி திரைப்படம் சில்லுக்கருப்பட்டி. இந்த படத்தில் மூன்று கதைகள் உள்ளது என்பதும் இந்த மூன்றாவது கதையில் லீலா சாம்சன் ஜோடியாக நவநீதன் ஸ்ரீராம் என்பவர் நடித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே

தற்காப்பு கலை நிபுணராக இருக்கும் ஸ்ரீராம் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

தமிழக காவல்துறை கமாண்டோ படை மற்றும் சென்னை மாநகர காவல் துறையினருக்கு ஸ்ரீராம் தற்காப்பு கலையை கற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் தற்காப்புக் கலைகளையும் அவர் நடத்தி வந்தார்

இந்த நிலையில் எதிர்பாராத வகையில் மொட்டை மாடியில் இருந்து ஸ்ரீராம் தவறி விழுந்து இறந்த தகவலை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.