Connect with us

அரை நூற்றாண்டுக்குப் பிறகு நிரம்பிய ஏரி… ஊருக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதி!

Tharamangalam lake

செய்திகள்

அரை நூற்றாண்டுக்குப் பிறகு நிரம்பிய ஏரி… ஊருக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதி!

சேலம் மாவட்டம், தாரமங்கலம் நீர் வழித்தட ஆக்கிரமிப்பால் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்தது…. பகுதியில் காவிரி உபரி நீரை நூறு ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தின் கீழ் திறந்து விடப்பட்ட மேட்டூர் அணையின் உபரி நீர் சின்னேரி, மானத்தாள் ஏரி, தொளசம்பட்டி ஏரி, பெரியேரிப்பட்டி ஏரி , பெரியகாடம்பட்டி ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பி தாரமங்கலம் ஏரிக்கு வந்தது. கடந்த 25 நாட்களாக வந்த மேட்டூர் அணை உபரிநீரால் தாரமங்கலம் ஏரி நிரப்பியது .

156 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது . இந்த ஏரி நிரம்பிய பின்னர் உபரி நீரானது பவளத்தனுர் ஏரி, துட்டம்பட்டி ஏரிகள் வழியாக சென்று சரபங்கா நதியில் கலப்பது வழக்கம். ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் நீர் வழித்தடங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டது.

இதுநாள் வரை ஏரிக்கு நீர் வரத்து இல்லாத காரணத்தால் இப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் தரிசாக மாறியுள்ளது . இந்நலையில் தற்போது அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளதால் இந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று தாரமங்கலம் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் என்று ஏராளமானோர் ஏரியிலிருந்து வெளியேறிய தண்ணீரில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

தாரமங்கலம் ஏரியில் இருந்து பவளத்தானுர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் நீர் வழித்தடத்தை ஆக்கிரமிப்பை செய்து வீட்டுமனைகளாக மாற்றியதால், நீர் வழித்தடம் இல்லாமல் , ஏரியிலிருந்து வெளியேறிய நீர், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. மேலும் ஏரி நீர் தாரமங்கலம் பேருந்து நிலையத்தில் புகுந்ததால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

இதுவரை நீர்வழிப்பாதையை ஏற்படுத்திக் கொடுக்காத வருவாய் துறை, பொதுப்பணி துறை அதிகாரிகளை கண்டித்து பாவத்தானுர் பகுதி பொதுமக்கள் சாலை மறியல் செய்ய போவதாக அறிவித்துள்ளனர்.

இதனால் சம்பவ இடத்தை பார்வையிட வந்த பொதுப்பணி துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் வள்ளமுனியப்பன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், விஏஓ சுசீலா ஆகியோர் நீர்வழித்தடத்தை ஆய்வு செய்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். உடனே நீர் வடித்தளத்தை ஏற்படுத்தி ஏரி நீர் முறையாக பவளத்தினால் நூல் ஏரிக்குச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top