Connect with us

நாமக்கல்: ஏரி நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்!!

Tharamangalam lake

தமிழகம்

நாமக்கல்: ஏரி நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்!!

இன்னும் ஒரு ஆண்டும் இல்லாத வகையில் தற்போதைய ஆண்டில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிதீவிரமாக காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல நீர்நிலைகள் தொடர்ந்து நிரம்பி கொண்டு வருகிறது.

மேலும் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் வரத்தும் சற்று அதிகமாகவே காணப்படுவதால் அணைகளில் இருந்து அதிக அளவு நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனால் ஒரு சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் ஏறி உள்ள நிரம்பி தண்ணீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பெய்த கனமழையின் காரணமாக ஓளப்பாளையம் ஏ நிரம்பி குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெரியார் நகர், கம்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சுமார் 50 வீடுகளில் வசிக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top