சென்னை போன்ற பெரு நகரங்களில் அடிக்கடி நடக்கும் விசயம் என்ன என்றால் பட்டம் விடப்படும் மாஞ்சா அறுந்து எங்காவது ஓரிடத்தில் விழும்போது அங்கே சென்று கொண்டிருப்பவர் மீது விழும்போது அவர் உயிரிழப்பார் இது அடிக்கடி சென்னையில் நடக்கும் நிகழ்வாகும்.
சிறுவனின் கழுத்தை எல்லாம் மாஞ்சா நூல் அறுத்து பலியான சம்பவம் எல்லாம் சென்னையில் நடந்துள்ளது. பட்டம் விடும் நூலில் கலக்கப்படும் கடுமையான இரும்பு பொருட்கள்தான் இதற்கு காரணம்.
இருப்பினும் இதை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு உடனே வெளியே வந்து விடுகிறார்கள் எந்த ஒரு கைது நடவடிக்கையும் இருப்பதில்லை.
இந்த நிலையில்
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினி நகரில் சீன ‘மாஞ்சா’ என்னும் தூள் கண்ணாடி பூசப்பட்ட காத்தாடி ஒன்று கழுத்தை அறுத்ததில் 20 வயது பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்துள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.
மேலும் அந்த பெண் தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளததாக யார் பட்டம் விட்டார் என அந்த நபரை கைது செய்வதற்காக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.