’தி கேரளா ஸ்டோரி’ காட்சிகள் ரத்து செய்யப்பட்ட மாநிலங்கள் மீது நடவடிக்கை: தயாரிப்பாளர் எச்சரிக்கை..!

தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தின் காட்சிகளை ரத்து செய்த மாநிலங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் கடந்த வெள்ளி என்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஒரு சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸ் பாதுகாப்புடன் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. தமிழகத்தில் இந்த படத்திற்கு தடை விதிக்கப்படவில்லை என்றாலும் ஒரு கட்டத்தில் இந்த படத்தை திரையரங்க உரிமையாளர்களே திரையிட விரும்பவில்லை என்று கூறியதாக செய்திகள் வெளியானது.

தமிழக அரசு இந்த படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் கூறியிருந்த நிலையில் திரையரங்குகள் தாங்களாகவே முன்வந்து காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் இந்த படத்திற்கு ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்து வந்தது என்பதும், பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

keralastory 1682844664 1682858247மேலும் இந்தியா முழுவதும் இந்த படம் மூன்றே நாட்களில் ரூ.35 கோடி வசூல் செய்ததாகவும் தமிழ்நாடு கேரளா தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் இந்த படம் பெரும் வரவேற்பு பெற்றதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கேரளாவில் நடந்ததாக கூறப்படும் இந்த படத்தை கேரளாவிலேயே திரையரங்குகளில் திரையிடப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் உள்பட பலரும் இந்த படத்தை சிறந்த படம் என்று கூறிய நிலையில் மத்திய பிரதேச அரசு இந்த படத்திற்கு வரி விலக்கு அளித்தது. ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே இந்த படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா என்பவர் தமிழ்நாடு உள்பட காட்சிகள் ரத்து செய்யப்பட்ட மாநிலங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews