தி கேரளா ஸ்டோரி படம் – வெளியாக தடையா?

கேரளாவைச் சேர்ந்த பெண்கள் உலக பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்-ல் இணையம் கதையை அடிப்படையாகக் கொண்ட தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் வெளியாக உள்ள நிலையில், இந்த திரைப்படம் திரையிட்டால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்து மாநில காவல்துறை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று சில முஸ்லிம் அமைப்புகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளன. ‘தி கேரளா ஸ்டோரி’ போஸ்டர் படத்தை வெளியிட கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் தடை விதித்தது.

இந்த படம் ரிலீஸ் ஆவதில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்து அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை மாநிலத்தில் படத்தை வெளியிட யாரும் முன்வரவில்லை.தற்போழுது அனைத்து தியேட்டர்களிலும் பொன்னியின் செல்வன் -2 திரையிடப்படுகிறது. அரசின் முடிவுக்காக தியேட்டர் உரிமையாளர்கள் காத்திருந்து பார்க்க முடிவு செய்துள்ளனர்” என்று தமிழக காவல்துறை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

பிற மாநிலங்களில் படம் வெளியாகும் என்று முடிவு எடுப்பதற்குள் காத்திருக்கிறார்கள். இந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் முன்னதாக ஆன்லைன் தளங்களில் வெளியிடப்பட்ட டிரெய்லரில், கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்-ல் கவர்ந்திழுத்து ISIS-ல் இணைந்தது பற்றிய கதை என்று கூறியது, ஐ.எஸ்.ஐ.எஸ்-ல் சேர தூண்டப்பட்ட மூன்று இளம் பெண்களின் கதையாக கதையை மாற்றியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

“மேகங்களில் மிதந்து வரும் புதிய ஆபத்து..?” – மழை நீரில் விளையாடுபவருக்கு எச்சரிக்கை…

மேலும் வெள்ளிக்கிழமை வெளியிட திட்டமிடப்பட்ட படத்தின் டிரெய்லர் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது என்று கூறினார்.’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் வெளியீட்டைத் தடை செய்யக் கோரிய மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.