சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரீஸ் திரைப்படம் இன்று விசாரணை!

கேரளா ஸ்டோரீஸ் திரைப்படத்தை தடை செய்ததற்கு எதிரான தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது .

சர்ச்சைக்குரியது கேரளா ஸ்டோரீஸ் திரைப்படம் நாடு முழுவதும் வெளியாகி உள்ளது .இந்த படத்திற்கு தமிழகம் கேரளா மேற்கு வங்கம் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகளும் வலியுறுத்தினர் .

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு அம்மாநில அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் வடக்கு தொடர்ந்து உள்ளார்.

அதில் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளித்த பிறகு படத்திற்கு தடை விதிக்க மாநில அரசு அதிகாரம் இல்லை என்றும் திரைப்படத்திற்கு தடை விதிக்க மாநில அரசு காரணமாக காட்ட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த படம் வெளியான ஒரே வாரத்தில் நாடு முழுவதும் 64 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது

இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தியேட்டர் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை காரணமாக திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது , இன்று இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

செமஸ்டர் விவகாரம்..! – “மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு பறி போக வாய்ப்பு ?

மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தும் கேரளாவில் இந்த படம் திரையிடப்பட்டு பல எதிர்ப்புகளை மீறி மக்கள் இந்த படத்திற்கு ஆதரவுஅளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.