Connect with us

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனை!!!

உயிரிழப்பு

தமிழகம்

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனை!!!

நேற்றைய தினம் உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சில அதிரடி கேள்விகளையும் அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்து இருந்தது. அதன்படி கள்ளக்குறிச்சி கலவரம் டிராக்டர் மோதியபோதுதான் ஆரம்பித்தது என்று கூறியிருந்தது.

மேலும் கலவரக்காரர்களுக்கு பள்ளி மாணவ மாணவிகளின் டிசி கிழிக்கும் உரிமையை யார் அளித்தார் என்றும் கேள்வியை எழுப்பினார்.

இதில் கலவரத்திற்கும் தங்கள் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மாணவியின் தந்தை கூறியிருந்தார். மேலும் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யவும் அதற்கான மருத்துவர் குழுவையும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் பள்ளி மாணவி உடல் மறுபரித பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் மருத்துவர்கள் ஜூலியானா, ஜெயந்தி கீதாஞ்சலி மற்றும் கோகுலராமன் பிரேத பரிசோதனையை செய்கின்றனர்.

ஹை கோர்ட் உத்தரவுப்படி தடையவியல் துறை நிபுணர் சாந்தகுமார் முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை நடைபெறுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top