திமுகவில் நிகழ்ந்த துயர சம்பவம்; மாரடைப்பின் காரணமாக கலைஞரின் நிழல் காலமானார்!

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது முத்தமிழறிஞர் கருணாநிதிதான். இவருக்கு உதவியாளராக சண்முகநாதன் இருந்தார். இந்த நிலையில் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் தற்போது காலமானார்.

 கலைஞரின் நிழல்

அதன்படி மறைந்த திமுக தலைவர் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80 ஆகும். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன் உயிர் மாரடைப்பால் பிரிந்தது.

சுமார் 50 ஆண்டுகளாக கலைஞரின் உதவியாளராக பணியாற்றியவர் கோ.சண்முகநாதன். காவல்துறையில் சுருக்கெழுத்தாளர் பணிபுரிந்த சண்முகநாதன் பின்னர் கலைஞரின் உதவியாளராக பணியில் சேர்ந்தார்.

அபாரமான நினைவாற்றல் கொண்ட கடின உழைப்பாளியாக சண்முகநாதன், கலைஞரின் நிழல் என அழைக்கப்பட்டார். கலைஞர் முதலமைச்சராக இல்லாத போதும் அவரது உதவியாளர் பணியில் தொடர்வதற்காக அரசு வேலையைத் துறந்தார். 1969 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கலைஞரின் உதவியாளராக சேர்ந்த சண்முகநாதன் கலைஞர் இறக்கும்வரை அவருடனே இருந்தார். இதனால் திமுக தொண்டர்கள் உறுப்பினர்கள் எனப் பலரும் சோகத்தில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment