இன்றைய தினம் திமுக கட்சியினர் இடையே மிகுந்த சிறப்பு வாய்ந்ததாக காணப்படுகிறது. ஏனென்றால் இன்று சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது.
இதில் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். மேலும் அவர் தான் கலைஞர் சிலையை திறந்து வைத்தார். இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் கலைஞர் சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்தது மிக மிகப் பொருத்தமானது என்றும் கூறினார். நட்புக்குரிய நண்பராகவே குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இருக்கிறார் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
நாட்டின் பல தலைவர்களை உருவாக்கியவர் கலைஞர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். மேலும் பராசக்தி, பூம்புகார் படத்தில் வசனங்கள் இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன என்றும் கூறினார். கலைஞர் தீட்டிய திட்டத்தால் தான் தமிழகத்தில் ஒவ்வொருவரும் பயன் பெற்று இருப்பார் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.