ரோல்ஸ்ராய்ஸ் கார் விவகாரம்: நீதிபதி தெரிவித்த கருத்து என்னை புண்படுத்தி, குற்றவாளி போல காட்டியுள்ளன!!

தனது நடிப்பாலும் தனது திறமையாலும் இன்று தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பெயரைப் பெற்றுள்ளார் நடிகர் விஜய். நடிகர் விஜய் நடிக்கும் அனைத்து படங்களும் தற்போது தமிழ் திரையுலகில் வசூல் சாதனை புரிகிறது.விஜய்

அவரின் படத்தில் பல அரசியல் கட்சிகளும் காணப்படும். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் குறித்து நடிகர் விஜய் சர்ச்சையில் சிக்கினார்.

தற்போது நடிகர் விஜய் நீதிபதியின் கருத்து குறித்து கூறியுள்ளார். அதன்படி இறக்குமதிக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் என்னை புண்படுத்தி உள்ளது என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

தனிப்பட்ட நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் என்னை குற்றவாளி போல காட்டியுள்ளன என்றும் நடிகர் விஜய் கூறியுள்ளார்.

கருத்துக்களை நீக்கக் கோரும் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப் பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நிலுவைத் தொகையான 32 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்தி விட்டோம் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment