Connect with us

81 வயது அம்மாவின் இறுதி ஆசையால் ஆயுள்தண்டனை கைதிக்கு, நீதிபதி காட்டிய கருணை

ஐகோர்ட் மதுரை

தமிழகம்

81 வயது அம்மாவின் இறுதி ஆசையால் ஆயுள்தண்டனை கைதிக்கு, நீதிபதி காட்டிய கருணை

81 வயது மூதாட்டி தாய்யின் கோரிக்கைக்கு கருணை காட்டிய நீதிபதிகள். ஆயுள் தண்டனை கைதிக்கு 20 நாள் பரோல் சாதாரண விடுப்பு வழங்கி நீதிபதிகள் உத்தரவு.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் மகனை தன்னுடன் ஒரு மாதம் வைத்துக் கொள்ள சாதாரண விடுப்பு கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி ஹரிகேசவநல்லூரைச் சேர்ந்த கருமேனி அம்மாள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் பழனிக்கு, ஒரு கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது அவர் பாளையங்கோட்டை சிறையில் தண்டனை கைதியாக உள்ளார். எனக்கு 81 வயதாகிறது. உடல் மிகவும் சோர்ந்துவிட்டது. இந்த நேரத்தில் எனது மகன் என் அருகில் இருந்தால் எனக்கு சற்று ஆறுதலாகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். எனவே அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்தனர். விசாரணை முடிவில், மனுதாரர் 81 வயதுடையவர்.
இந்த மூதாட்டி, தன் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருப்பதால், சிறிது காலம் தன் மகனுடன் இருக்க விரும்புகிறார். மனுதாரர் மகன் மீதான மற்றொரு கொலை வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மனுதாரரின் மகனுக்கு 20 நாட்கள் சாதாரண பரோல் வழங்கப்படுகிறது. இந்த நாட்களில் அவர் ஹரிகேசவநல்லூரில் தனது தாயாருடன் தங்கியிருக்க வேண்டும். தினந்தோறும் மாலை நேரத்தில் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளும் விதித்துள்ளது. மேலும் பரோல் முடிந்த உடன் பாளையங்கோட்டை சிறையில் சரண் அடைய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top