Connect with us

கள்ளக்குறிச்சி வன்முறை; மாணவியின் தந்தைக்கு நீதிபதி உத்தரவு!

150349 court chennai 1

தமிழகம்

கள்ளக்குறிச்சி வன்முறை; மாணவியின் தந்தைக்கு நீதிபதி உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மாணவியின் உடலை மறு பிரேத மரிசோதனை செய்ய வேண்டும் என்று அவருடைய தந்தை வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி வன்முறையை பொருத்தவரையில் அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் சட்டத்தை கையில் எடுத்து வன்முறையில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார். அதேபோல் 4500 மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டு இருப்பதால் இந்த வன்முறையானது திட்டமிட்டு நடைபெறுவதாக தெரிவித்தார்.

அதே போல் இந்த வழக்கை பொறுத்த வரையில் விசாரணை அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மறு பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், மறுபிரேத பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் எவ்வித பிரச்சனையும் செய்யாமல் மாணவியின் இறுதி சடங்கை செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top