ரங்கஸ்தலம் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் தான் புஷ்பா. அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
பான் இந்தியா படமான புஷ்பா அனைத்து மொழிகளிலும் நல்ல வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பாடல் வெளியாகி தற்போது வரை யூடியூப்பில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் சமந்தாவின் நடனம் தானாம்.
மேலும் புஷ்பா படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் தற்போது முதல் பாகம் தான் வெளியாகியுள்ளது. விரைவில் இரண்டாம் பாகமும் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் பாகத்தின் தாறுமாறான வெற்றி காரணமாக அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் இரண்டாம் பாகத்தில் சம்பளத்தை உயர்த்தி விட்டார்களாம்.
அதன்படி புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்கு அல்லு அர்ஜூனுக்கு சம்பளமாக சுமார் 30 கோடி ரூபாயும், ராஷ்மிகா மந்தனாவிற்கு சம்பளமாக சுமார் 2 கோடியும் வழங்கப்பட்டதாம். ஆனால் படத்தின் வெற்றி காரணமாக இருவரின் மார்க்கெட்டும் தென்னிந்திய சினிமாவில் அதிகரித்து விட்டதாம்.
அதனால் தற்போது இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜூனுக்கு 32 கோடியும், ராஷ்மிகாவிற்கு 3 கோடியும் சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதல் பாகத்தின் வெற்றி காரணமாக தயாரிப்பாளர்களும் அவர்கள் கேட்கும் சம்பளத்தை தர தயாராக உள்ளார்களாம்.