ஜனாதிபதையை சந்தித்த திமுக நிர்வாகிகள்: டெல்லிக்கு பறக்கும் ஆளுநர்!!

தமிழக ஆளுநர் ரவி நாளை டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கடந்த 9-ம் தேதி சட்டசபை தொடங்கியது. அப்போது எழுதி கொடுத்த உரையில் சில வார்த்தைகளை சேர்த்தும், நீங்கியும் வாசித்தார். இத்தகைய நிகழ்வு திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசும் பொருளாக மாறியது.

இதை வேரோடு அழிப்பதே அரசின் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இந்நிலையில் ஆளுநருக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும் என திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, ஆர். ராசா உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் குடியரசு தலைவரை சந்தித்து மனு கொடுத்திருந்தனர்.

இந்த சூழலில் நாளை காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி ஆளுநர் ரவி விமானம் மூலம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் சனிக்கிழமை இரவு மீண்டும் சென்னை வருவார் என கூறப்படுகிறது.

மதிய உணவில் கிடந்த எலி,பல்லி: அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

அதே போல் உள்துறை அமைச்சர் அமிர்ஷா மற்றும் குடியரசு தலைவர் திரெளபது முர்மு ஆகியோரை சந்திக்க இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.