மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்: நீதிமன்றம் அதிருப்தி!!

சிதம்பரத்தில் பேருந்துநிலையத்தில் மாணவன் ஒருவன் மாணவிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் பிளஸ்-2 மாணவிக்கு தாலி கட்டியுள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தலைவர்: அமைச்சர் பொன்முடியின் மகன் தேர்வு!

இந்நிலையில் சம்பவம் குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் போலீசார் மாணவனைக் கைது செய்தனர். அதேசமயம் மாவட்ட குழந்தைகள் காப்பக அதிகாரிகள் மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

இதன் காரணமாக தனது மகளை மீட்டு தரவேண்டும் என மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை அமர்வு இன்று வந்தது.

குஷியோ குஷி! 15 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! வானிலை அப்டேட்..!!

அப்போது மாணவி சட்டவிரோதமாக காப்பகத்தில் இருப்பதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் மாணவியை தாயிடம் ஒப்படைக்கப்படைத்துள்ளதாக மாவட்ட குழந்தைகள் காப்பகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதி மாணவியை முழுமையாக விசாரணை நடத்தாமல் அரசு காப்பகத்தில் தங்க வைத்தது தவறானது என்று குழந்தைகள் நல குழுவினருக்கு தனது அதிருப்தியை தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment