பஸ் ஸ்டாப்பில் மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்: பாலிடெக்னிக் மாணவன் கைது!

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நிழற்குடையில் பள்ளி மாணவன் மாணவிக்கு தாலி கட்டிய விவகாரத்தில், பாலிடெக்னிக் மாணவன் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் பிளஸ் 2 மாணவிக்கு தாலி கட்டிய வீடியோவானது சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இந்நிலையில் விவகாரம் தொடர்பாக பிளஸ் மாணவியை சமூல நலத்துறை ரம்யா கிருஷ்ணன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.

ரவீந்திரநாத் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

அதே சமயம் 2-வது நாளாக கல்லூரி மாணவனை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைப்பெற்றது.

இதனிடையே விசாரணைக்கு பிறகு பாலிடெக்னிக் மாணவன் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வருவாய்க்கு ஆதாரம்.. மதுவிலக்கு சாத்தியமாகவில்லை… ஐகோர்ட் அதிரடி!!

அதே போல் திருமண வீடியோவை இணையத்தில் வெளியிட்ட பாலாகி கணேசன் என்பவர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment