Connect with us

சாதி ரீதியாக பேச்சு! 2 ஆசிரியைகள் சஸ்பெண்ட்;

Suspend Phtoto

தமிழகம்

சாதி ரீதியாக பேச்சு! 2 ஆசிரியைகள் சஸ்பெண்ட்;

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சாதிரீதியாக மாணவர்களிடம் பேசிய பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் அதே பள்ளியில் படிக்கும் மாணவரிடம் சாதி ரீதியாக பேசிய ஆடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி  வைரலாக பரவியது.

இதனையடுத்து ஆடியோ விவகாரம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் மீனா அவர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில் விசாரணைக்குப் பிறகு ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் மீனா ஆகிய இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர் சாதிரீதியாக பேசியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top