Connect with us

ரேஷன் கடைகளில் சிக்கலை ஏற்படுத்தும் பயோமெட்ரிக் முறை.! இனி கண் கருவிழி முறை முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும்..!!

ரேஷன் கடை

தமிழகம்

ரேஷன் கடைகளில் சிக்கலை ஏற்படுத்தும் பயோமெட்ரிக் முறை.! இனி கண் கருவிழி முறை முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும்..!!

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் முறை நடைமுறையில் உள்ளது. இந்த பயோ மெட்ரிக் முறையில் பல்வேறு விதமான சிக்கல்கள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் தற்போது கண் கருவிழி மூலம் சரி பார்க்கும் முறை முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சங்கராபாணி  தெரிவித்துள்ளார்.

இந்திய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனாளிகளின் விரல்ரேகை சரிபார்ப்புக்கு பின் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் விரல் ரேகை சிக்கல்கள் தோன்றும் போது கையெழுத்து பெற்று பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் கடைக்கு வராத நிலையில் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் வாயிலாக பொருட்கள் வழங்கப்படுகிறது. 98.63% விரல் ரேகையை சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் விரல் ரேகை சரிபார்ப்பில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறிக் கொண்டு வந்தனர். இதற்கு சரிகட்டும் வகையாக ரேஷன் கடைகளில் கருவிழி சரிபார்க்கும் முறை முன்னோட்டமாக நகர்ப்புறங்களிலும் ஊரகப் பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார் .

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top