இந்தியர்கள் உடனடியாக கீவ் நகரை விட்டு வெளியேற உத்தரவு!- இந்திய தூதரகம்;
கடந்த ஏழு நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா அதிதீவிரமாக போர் புரிந்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக உக்ரைன் தலைநகர் கீவ் நகரை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.
இதனால் கீவ் நகரில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்தியர்களும் அங்கு ஏராளமானோர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமல்லாமல் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலால் கீவ் நகரில் உள்ள சில மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக தகவல் கிடைத்து கொண்டு வருகிறது.
இதனால் இந்திய தூதரகம் உடனடியாக உக்ரேன் தலைநகர் கீவ் நகரில் இருந்து இன்றே வெளியேற உத்தரவிட்டுள்ளது. அதன்படி உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலிருந்து இந்தியர்கள் இன்று அவசரமாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் கூறியது.
மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் ரயிலிலோ அல்லது வாகனங்களிலோ உடனே தலைநகர் கீவ் நகரிலிருந்து வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் கூறியுள்ளது. ரஷ்ய ராணுவம் கீவ் நகரை நெருங்கி வரும் நிலையில் இந்தியர்கள் வெளியேற தூதரகம் உத்தரவிட்டுள்ளது.
