இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை! பயிற்சியாளர் அதிர்ச்சி பேட்டி!!

கிரிக்கெட் உலகமே அஞ்சும் அளவிற்கு காணப்படும் இந்திய அணிக்கு சற்று சறுக்கலாக அமைந்து உள்ளது தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம். இந்திய அணி தென் ஆப்பிரிக்கா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் முதலாவது மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது. 2க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அதேவேளையில் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியை பார்த்து உலகமே அஞ்சும் நிலையில் உள்ளபோது தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

ஏனென்றால் இந்திய அணி ஆறுதலாக கூட ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. இதனால் தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி முழுவதுமாக கைப்பற்றியது. நேற்றைய தினம் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தபோதிலும் கடைசி சில நேரத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதுகுறித்து போட்டியின் முடிவில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அதில் இந்திய அணி தற்போது சிறப்பாக விளையாடவில்லை என்று கூறினார்.

இந்திய அணியின் புதிய கேப்டனாக கே.எல். ராகுல் இப்போதுதான் செயல்பட்டு வருகிறார். இருப்பினும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அதிர்ச்சிகரமான பேட்டி அளித்தார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.