
தமிழகம்
குடியரசுத் தலைவர் தேர்தல்: ஆளும் கட்சி அமைத்துள்ள குழுவில் தமிழகத்தில் இருந்து ஒருவர்?
தற்போது இந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக எதிர் கட்சியினர் பலரும் அதி தீவிரமாக ஆலோசனை கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதுவும் குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஆளும் கட்சியினர் குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக 14 பேர் கொண்ட மேலாண்மை குழுவை அமைத்து உள்ளதாக தெரிகிறது. இதில் நம் தமிழகத்தை சேர்ந்த கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ உள்ளடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
அதன்படி குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக 14 பேர் கொண்ட மேலாண்மை குழுவை பாஜக அமைத்துள்ளது. கஜேந்திர ஷெகாவத் ஒருங்கிணைப்பாளராக உள்ள குழுவில் கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இடம் கிடைத்துள்ளது.
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கிஷன் ரெட்டி, சிடி ரவி உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஜூன் 21ம் தேதி டெல்லியில் எதிர்க்கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் 17 கட்சிகள் பங்கேற்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
