இன்று முதல்! ஆவின் வெண்ணெய் விலை உயர்வு.. பொதுமக்கள் கவலை!!

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் பால் விலையை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆவின் நிர்வாகம் ஆவின் வெண்ணெய் விலையை உயர்த்தியுள்ளதால் மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்றதிலிருந்து ஆவின் பொருட்களின் விலை அவ்வப்போது உயர்வது வழக்கம். அந்த வகையில் ஐஸ்கிரீம், தயிர், நெய், ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் உள்ளிட்டவைகளுக்கு விலை அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் பொது மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஆவின் வெண்ணை விலையும் உயர்த்தியுள்ளது. அதன் படி, சமையல் பயன்பாட்டிற்கான உப்பு கலக்காத வெண்ணை 100 கிராம் ரூ.52ல் இருந்து ரூ.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல் 500 கிராம் ரூ. 250ல் இருந்து ரூ.260 ஆகவும் ஆகவும், உப்பு கலந்த வெண்ணெய், 100 கிராம் ரூ. 52ல் இருந்து ரூ.55 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து 500 கிராம் ரூ.255ல் இருந்து ரூ.265 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.