இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு என்பது மற்ற நாடுகளை விட மிகவும் குறைவுதான்!!!
நம் இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. இதனால் பலரும் நூதனமான முறையில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெட்ரோலின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகிறது.
இதனால் பெட்ரோல் லிட்டருக்கு 110 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் டீசல் விலையும் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறுள்ள நிலையில் பெட்ரோலிய அமைச்சர் இது குறித்து சில புள்ளிவிவரங்களை கூறியுள்ளார். அதன்படி அவர் நாடாளுமன்றத்தில் பேசிய போது மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மிகவும் குறைவானது தான் என்று பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் கூறியுள்ளார்.
ஏனென்றால் மற்ற நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் வெறும் 5% மட்டுமே எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
ஏனென்றால் உக்ரைன்-ரஷ்யா போருக்கு பின்பு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவில் வெறும் 5% மட்டுமே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் கூறியுள்ளார்.
