கொரோனா தொற்றின் வேகம் அதிகரிப்பு- ஆனால் மக்கள் மருத்துவமனை வருவது குறைவு -சுகாதாரத்துறை அமைச்சர்

கொரோனா தொற்றின் வேகம் மற்றும் ஓமிக்ரான் தொற்றின் வேகம் மிக அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் ஞாயிற்றுகிழமை முழுவதும் முழு லாக் டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

தற்போது பெருநகரங்களில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு இல்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்ரமணியன் கூறியதாவது.

வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளவர்கள் அவர்களின் இல்லங்களில் வசதி இல்லையென்றால் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அவ்வாறு வருபவர்கள் மட்டும்தான் இன்று சிசிசி எனபடுகின்ற கொரோனா கேர் சென்டரில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தொடர் காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுதிணறல், நுறையீரல் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் மக்கள் மருத்துவமனைக்கு வருவது குறைவாக தான் உள்ளது என கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment