3 கோடி கட்ட நோட்டீஸ்! ரிக்க்ஷா ஓட்டுனருக்கு அதிர்ச்சி கொடுத்த வருமானவரித்துறை!

தற்போது உலகம் நவீனமாக மாறிக்கொண்டே வருகிறது. இதனால் பல பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் இணையதளத்தின் மூலமாகவே நடைபெறுகிறது. இதனால் பண மோசடி பல நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் அதிக பண மோசடி நடைபெற்று வருகிறது.வருமான ஒழிப்புத்துறை

மேலும் சாதாரண எளியவரின் ஆதார் அட்டையை பயன்படுத்தி பலரும் பண மோசடி செய்து வருகின்றனர். இவை தொடர்ச்சியாக நம் இந்தியாவில் உள்ள அனைத்து  மாநிலங்களிலும் நடைபெறுகிறது.

தற்போது அதன் வரிசையில் ரிச்ஷா ஓட்டுனருக்கு வருமான வரித்துறையினர் அதிர்ச்சியான நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதன்படி உத்தரபிரதேச மாநிலத்தில் பகுதியில் பகதூர் பகுதியில் ஓட்டுகிறார்.

அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமானவரித் துறையினர் அனுப்பிய நோட்டீசில் பிரதாப்சிங் 3 கோடி வரை வரி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரிக்க்ஷா ஓட்டுநர் பிரதாப்சிங் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த போது அவரின் ஆதார் அட்டை பயன்படுத்தி வேறு ஒருவர் ஜிஎஸ்டி பெற்று தொழில் செய்ததாக தெரிய வந்துள்ளது. இத்தகைய மோசடியில் ஈடுபட்டது யார் என்று தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment