#Breaking 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சகோதரர்கள்; தாத்தா, சித்தப்பா உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சொந்த குடும்பத்தினருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமி தாத்தா, சித்தப்பாக்கள் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், சகோதரர்கள் இருவருக்கு 10 ஆண்டு மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போக்‌ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவின் புகாரில் மயிலாப்பூர் காவல் துறை வழக்கு பதிவு செய்திருந்தனர். வழக்கு விசாரணை நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் நடந்து வந்த நிலையில், குற்றச்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தார்.

இதனையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தாத்தா மற்றும் 3 சித்தப்பாக்களுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சிறுமியின் சகோதரர்களில் ஒருவருக்கு பத்தாண்டு சிறை, மற்றொருவருக்கு ஐந்தாண்டு சிறை தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதிபாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.