டார்ச்சர் கொடுத்த நிறுவன மேலாளர்; உப்பள தொழிலாளி எடுத்த பகீர் முடிவு… சிக்கியது உருக்கமான கடிதம்!

தூத்துக்குடி அருகே உப்பள நிறுவன தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தூத்துக்குடி அருகே உப்பள நிறுவன மேலாளர் கொடுத்த டார்ச்சரே தன் முடிவுக்கு காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு உப்பள தொழிலாளி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விளாத்திகுளம் அருகே உள்ள பனையூரைச் சேர்ந்தவர் உப்பளத் தொழிலாளி வேல்முருகன். இவர் உப்பளம் அருகே உள்ள ஒரு கட்டடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மரணத்திற்கு முன்பாக அவர் தன்னுடைய முதலாளிக்கு உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.

அதில் உப்பள மேலாளர் விஜயகுமார் தனக்கு அளவு கடந்த மன உளைச்சல் கொடுத்ததாகவும், தன்னிடம் இருந்த ஒரு லட்சத்து 90 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு தராமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வேல்முருகனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் குற்றச்சாட்டுக்கு ஆளான விஜயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் தனது உப்பள உரிமையாளருக்கு எழுதிய அந்த தற்கொலை கடிதத்தில் :

ஐயா மன்னிக்கவும். இந்த தற்கொலை முடிவுக்கு காரணம் ப்ரொடக்ஷன் மேனேஜர் விஜயகுமார் தான் காரணம் அடிக்கடி போனிலும் நேரிலும் காரணம் இன்றி மட்டம் தட்டி தரக்குறைவாக பேசுகிறார் தகாத வார்த்தைகளில் 30 வருஷம் வேலை பார்த்து என்னத்த கிழிச்சீங்க என்கிறான் நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காக பொறுமையாக இருந்து வந்தேன். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு என்னிடம் அவசரமாக வீட்டு வேலை நடக்கிறது பணம் 2 லட்சம் வேண்டும் என்று கேட்டு என்னிடமிருந்து சீட்டு போட்டு பணம் 1,90,000 ஆயிரம் ரூபாய் 6 மாதத்தில் தந்து விடுகிறேன் என்று சொல்லி வாங்கிவிட்டார். 4 மாதமாக தருகிறேன் தருகிறேன் என்று சொன்னவர் இப்போது அதை எல்லாம் முடியாது.நீ முதலாளியிடம் சொன்னால் நம்ப மாட்டார். நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் முதலாளி கேட்பார்.

மீண்டும் பணத்தை என்னிடம் கேட்டால், உன்னை ஏதாவது காரணம் சொல்லி உன்னை வேலையை விட்டு துரத்தி விடுவேன் என்கிறார். என்னிடம் பணத்தையும் பறித்துக் கொண்டு, என்னை கடுமையாகப் பேசி மட்டம் தட்டி பேசுகிறார். என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி என்னை தற்கொலை செய்யும் அளவுக்கு செய்து விட்டார். இன்று காலை 10 மணி முதல் 1 மணி நேரத்தில் 10 போன் செய்து என்னை ரொம்ப டார்ச்சர் கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டார்.

என்னைப்போல இன்னும் பல பேருடைய வாழ்க்கையை சீரழித்துவிட்டார் பல பேரை வேலையை விட்டு நீக்கி விட்டார். இப்படி பல பேரிடம் பணத்தையும், பல பெண்களின் , சீரழித்துவிட்டார். இது எல்லோருக்கும் தெரியும்.

நீங்கள் அவருக்கு முழு பவர் கொடுத்து வைத்து இருப்பதால் “என்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது என்று தெனாவட்டாக பேசி வருகிறான். என்னுடைய சாவு அவனுக்கு பதிலடி கொடுக்கும். மேனேஜர் என்று மதிப்பு மரியாதை கொடுத்து தான் இதுவரை வேலை பார்த்து வருகிறேன். என்னுடைய தன்மானத்தையும் இழந்து, பணம் 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயையும் பறி கொடுத்து என்னுடைய உயிரையும் பறித்து விட்டான். என்னுடைய சாவுக்கு முழு காரணம் O. விஜயகுமார் தான் காரணம். அவனுக்கு தக்க தண்டனை கிடைக்க வழிவகை செய்யுங்கள் என்றும்
எழுதப்பட்டிருந்தது

இந்த தற்கொலை குறித்து குளத்தூர் போலீசார் பணப்பிரச்சனை தான் தற்கொலைக்கு காரணமாக ? இல்ல வேறு ஏதேணும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.