திருச்சி மாவட்டம் உறையூரில் இரண்டு ரவுடிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி உறையூரைச் சேர்ந்த துரைசாமி அவரது சகோதரர் சோமு ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளனர். குழுமாயி அம்மன் கோயில்
குறிப்பாக புதுக்கோட்டையில் நடந்த இளவரசன் என்பவரது கொலை வழக்கில் துரை மீது குற்றச்சாட்டப்பட்டு, அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக திருச்சி காவல்துறையினர் இன்று காலை துரைசாமி வீட்டிற்குச் சென்று அவரை கைது செய்துள்ளனர். துரைசாமியை கைது செய்து அழைத்துச் செல்ல முற்பட்டபோது, துரை மற்றும் சோமு இருவரும் தப்பிக்க முயன்றுள்ளனர்.
அப்போது காவல்துறையினரை சகோதரர்கள் இருவரும் அரிவாளால் வெட்ட முயன்றதாக தெரிகிறது. ரவுடிகள் இருவரும் தப்பியோடுவதை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன், அவர்களது கால்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த இருவரும் திருச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.