அசுர வேகத்தில் பரவ ஆரம்பித்துவிட்டது ஒமைக்ரான்; பாதிப்பு எண்ணிக்கை 578 ஆக உயர்வு!

2019 ஆண்டுக்குப் பின்னர் உலகமெங்கும் நோய் நோய் பரவலின் தாக்கமே சுற்றி காணப்படுகிறது. குறிப்பாக கொரோனா தாக்கம் இன்றளவும் குறையாமல் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கண்டறியப்பட்டு வருகின்றன. இவ்வாறு உள்ள நிலையில் புதிதாக ஒமைக்ரான் என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

ஒமைக்கிரான்

இவை முதலில் தென்னாப்பிரிக்க நாட்டில் தோன்றியது. தற்போது இந்தியாவிலும் அதிதீவிர வேகத்தில் பரவி வருவதாக காணப்படுகிறது. இதன் விளைவாக நேற்றைய தினம் 422 ஆக இருந்த ஒமைக்ரான்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 578 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியாவில் இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட மாநிலங்களில் எண்ணிக்கையும் 17ல் இருந்து 19 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

நம் தமிழகத்தில் 97 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 578 பேரில் 151  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment